மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 நவம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 நவம்பர் 2025
Updated on
2 min read

மேஷம்: வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரும். பணப்பற்றாக்குறை,டென்ஷன் வரலாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகுவது நல்லது. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

ரிஷபம்: கடந்த கால அனுபவங்களை, சாதனைகளை நினைத்து மகிழ்வீர். விவாதங்களை தவிர்ப்பீர். எதிலும் உங்கள் கை ஓங்கும். வியாபாரரீதி யாக சிலரை சந்திப்பீர். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஓரளவு லாபம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

மிதுனம்: தடைபட்டு கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம்.

கடகம்: அடிப்படை வசதி பெருகும். குழப்பங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

சிம்மம்: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு நல்ல லாபம் பெறுவீர்.

கன்னி: எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். தடைகளை தாண்டி முன்னேறுவீர். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். வியாபாரம் சிறக்கும்.

துலாம்: தொட்டது துலங்கும். குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். சகோதரர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

விருச்சிகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மனைவிவழி உறவினர்களிடம் இருந்த பகை விலகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவர். வாகனத்தை சீர் செய்வீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

தனுசு: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர். வியாபார போட்டி விலகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். பணவரவு மனநிறைவை தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

கும்பம்: வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர். குடும்ப சூழலை உணர்ந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வர். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மீனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in