மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 31 அக்டோபர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 31 அக்டோபர் 2025
Updated on
2 min read

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். வேலை, கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தி யோகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

ரிஷபம்: எதிர்பாராத சுபச் செலவுகள் மனநிறைவைத் தரும். நவீன மின்னணு பொருட்கள் வாங்குவீர். நல்ல இடவசதி உள்ள வீட்டுக்கு குடிபுகு வீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபார போட்டிகளை எளிதாக சமாளிக்கும் வழி தென்படும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கடகம்: குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் தலை தூக்கும். உடல்சோர்வு இருக்கும் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர். பங்குதாரர்களால் வியாபாரத்தில் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்கித் தவிப்பீர்.

சிம்மம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

கன்னி: உறவினர், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப் படும். மகளுக்கு திருமணம் கூடி வரும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றியுண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஈட்டுவீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும்.

துலாம்: தாழ்வுமனப்பான்மை நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களிடம் தெளிவாகப் பேசி சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

தனுசு: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர் களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மகரம்: புது எண்ணங்கள் மனதில் தோன்றும். உறவினர், பால்ய நண்பர் களை சந்திப்பீர். கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள். நீங்கள் வேடிக்கையாக பேசுவது பிரச்சினையில் முடியலாம். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். வியாபாரம் திருப்தி தரும்.

கும்பம்: முக்கிய முடிவுகளை சற்று தாமதப்படுத்தவும். சிக்கனமாக செலவு செய்யவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செயல்படவும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரரீதியாக சிலரது உதவிகள் தேவைப்படும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும்.

மீனம்: தட்டு தடுமாறிக் கொண்டிருந்த நிலை மாறி தைரியமாக முடிவு எடுப்பீர். தாய்வழி உறவினர்களின் ஆதரவு உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். முக்கிய அதிகாரிகளை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in