மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 அக்டோபர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 அக்டோபர் 2025
Updated on
2 min read

மேஷம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்கள் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு நல்ல லாபம் பார்க்கலாம்.

மிதுனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். யாரிடமும் முன்கோபத்தை காட்ட வேண்டாம். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் பிறரைப் பற்றி குறை கூறுவதை தவிர்க்கவும்.

கடகம்: திடீர் பணவரவு உண்டு. மனதில் இருந்த பயம் விலகும். பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவ லகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். பணிச்சுமை குறையும். வியாபாரத் தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.

சிம்மம்: சகோதர வகையில் உதவி கிட்டும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கன்னி: எதிர்பாராத பணவரவால் மனமகிழ்ச்சி உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முற்படுவீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

துலாம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்.

விருச்சிகம்: பேச்சில் கவனம் தேவை. வாகனம் செலவு வைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகுவது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். போட்டிகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.

தனுசு: குழப்பம் நீங்கி இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். பிரியமானவர்களை சந்திப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்.

மகரம்: நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். முன்கோபத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in