இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் அலைச்சல், டென்ஷன் விலகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்புயரும்.

மிதுனம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். மூத்தோர் சொல் பேச்சை கேட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் அலைச்சல் இருக்கும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.

கடகம்: பிரபலங்கள் உதவுவர். பயணம் சிறப்பாக அமையும். நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.

சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் போட்டி விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

துலாம்: சுறுசுறுப்புடன் பணிகளை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைத் திறன் கூடும். அலுவலகத்தில் நீடித்த குழப்பம் நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்: வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பால்ய நண்பர்களால் விரயச் செலவுகள் வரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் எச்சரிக்கை அவசியம்.

தனுசு: இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவருவீர். தோற்ற பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். கூட்டுத்தொழிலில் போட்டி குறையும். லாபம் உண்டு.

மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் விஐபிகளின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவர். நண்பர் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

மீனம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in