இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: முகப் பொலிவுடன் காணப்படுவீர். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

ரிஷபம்: குறை கூறியவர்கள் வலிய வந்து பேசுவர். வீட்டில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.

கடகம்: பழைய சொத்து பிரச்சினைகளை இப்போது கையிலெடுக்காதீர். குடும்பத்தில் குழப்பங்கள் வரும். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். வியாபாரம், அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். வியாபாரம், உத்தியோகத்தில் யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

கன்னி: விஐபிகள் அறிமுகமாவர். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கி கடன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும். சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும்.

துலாம்: மனதிலிருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாருக்கு இருந்து வந்த அசதி நீங்கும். பழைய கடனை தீர்க்க உதவி கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

விருச்சிகம்: குடும்பத்தினரை கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தொழில் ரீதியாக சில விஐபிகளை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் ஆதரிப்பர். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

தனுசு: மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: நண்பர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர். ஆன்மிக நாட்டம் கூடும். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் நற்பெயர் கிட்டும்.

கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளின் நடவடிக்கையை கவனிப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்கள் எதிராக செயல்படுவர். கவனமாக இருக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

மீனம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயமுண்டு. விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தம்பதிக்குள் இருந்த பிரச்சினை விலகும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in