இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கு விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வீர்கள்.

ரிஷபம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியா பாரம் திருப்திகரமாக அமையும்.

மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நிலை சீராகும். உற வினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் சமா ளிப்பீர்கள். அசதி, கவலை நீங்கும். மாலைப் பொழுதில் மன நிம்மதி பிறக்கும்.

சிம்மம்: காலையில் நல்ல தகவல் கிடைக்கும். தம்பதிக் குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உடல் சோர்வு, வயிற்று வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

கன்னி: பிரச்சினையில் இருந்து விடுபட மாற்றுவழி கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு.

துலாம்: வெளிப்படையாக பேசி, காரியங்களை சாதிப்பீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் - மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

விருச்சிகம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் எதிராக செயல்பட்ட ஊழியர்களை மாற்றுவீர்கள்.

தனுசு: புதிய மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வாகன பழுது நீங்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

மகரம்: குடும்பத்தில் யாருடனும் வீண் வாக்குவாதம் வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சூடுபிடிக்கும்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவை குறைத்து சேமிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் பிரச்சினைகள் ஓயும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in