Published : 02 May 2025 06:18 AM
Last Updated : 02 May 2025 06:18 AM
மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் மறையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். நல்லவர்களின் நட்பு கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டி குறையும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: வீண் குழப்பங்கள், அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் பாக்கிகளை நிதானமாக வசூலிக்கவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
கடகம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்க பெறுவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
விருச்சிகம்: குடும்பத்தில் செலவுகள் வரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம். பணிகளை முடிக்க முடியாமல் திணருவீர்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு. எதிலும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும்.
மகரம்: மின் சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர். பழைய கடனை நினைத்து வருந்தாதீர். புதுவழி பிறக்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்: தொட்டது துலங்கும். தடைகள் நீங்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனடியாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மீனம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு விலகும். பணவரவு உண்டு. புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறிக் கொண்டிருக்காதீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT