

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர், வேற்றுமொழி பேசுபவர் உதவுவர். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வியாபாரம் சிறக்கும்.
மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து செயல்படவும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்.
கடகம்: முன்கோபம் தவிர்ப்பீர். மகளின் திருமண விஷயமாக அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நன்மை தரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்காதீர்.
சிம்மம்: குடும்பத்தார் மத்தியில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு விலகும்.
கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முன் கோபம் குறையும். விரும்பிய பொருட்களை வாங்குவீர். பணவரவு உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்துக் கொள்வீர். தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினையில் தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டப்படுவீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.
தனுசு: அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிட்டும். நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். அலுவலகத்தில் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். தொழிலில் புதிய பங்குதாரரை சேர்ப்பீர்.
மகரம்: முன்கோபத்தை தவிர்த்து இங்கிதமாக பேசவும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு வரக்கூடும். உத்தியோக ரீதியாக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.
கும்பம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தி யில் மதிப்பு உயரும். குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட வேலைகள் முடியும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.