

மேஷம்: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: பழைய பிரச்சினைகளை பற்றி எதுவும் பேச வேண்டாம். ஆன்மிகத்தில் ஈடுபடவும். அலுவலகத்தில் யாரையும் குறை கூட வேண்டாம். வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் குறித்து கவலைப்படாமல் முன்னேறுவீர்கள்.
மிதுனம்: எதார்த்தமான வார்த்தைகளால் சிலரை கவருவீர். பழைய கடனை பைசல் செல்வீர். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். வழக்கில் வெற்றி பெறுவீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
சிம்மம்: பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவர். திட்டமிட்டபடி அலுவலகப் பயணம் அமையும். வியாபாரம் சிறக்கும்.
கன்னி: அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபார போட்டிகளை தகர்த்தெறிவீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
துலாம்: நீண்ட நாள் முயற்சிக்கு இப்போது பலன் கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். வியாபாரம் லாபம் தரும்.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளுக்கு உடல் உபாதைகள் வரும். வியாபாரத்தில் திடீர் முடிவு வேண்டாம். அலுவலகரீதியான பயணத்தால் ஆதாயமுண்டு. மேலதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்.
தனுசு: சவாலில் வெற்றி பெறுவீர். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். வியாபாரம் சூடு பிடிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபம் தரும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்க வேண்டியதிருக்கும்.
மகரம்: அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் வெற்றி காண்பீர்.
மீனம்: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பிரபலங்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த பகை நீங்கும். வீட்டை அலங்கரிப்பீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.