Published : 16 Apr 2025 06:06 AM
Last Updated : 16 Apr 2025 06:06 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பாராத செலவு, வெளியூர் பயணம், மன உளைச்சல் வந்து போகும். வேலையாட்களால் தொந்தரவு ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுங்கள். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.

ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி ஏற்படும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

மிதுனம்: பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள் வார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கடகம்: சுபச்செலவுகள் உண்டு. வீட்டுக்குத் தேவையான நவீன மின்சாதனங்களை வாங்குவீர்கள். இடவசதியில்லாமல் தவித்தவர்கள், இனி சகல வசதிகளுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்: பூர்வீக சொத்துப் பிரச்சினைகளை பேசித் தீர்க்க வழி பிறக்கும். பணப் பற்றாக்குறை விலகும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும்.

கன்னி: மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். மூத்த சகோதரர் உங்கள் உதவியை நாடுவார்.

துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த சிலரின் உதவியை நாடுவீர்கள்.

விருச்சிகம்: அலைச்சல், டென்ஷன் ஏற்படும். வீண் விவாதங்களில் தலையிடாமலிருப்பது நல்லது. பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

மகரம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவு வார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயார் ஆதரவாக இருப்பார்.

கும்பம்: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொறுப்பு களால் சந்தோஷமடைவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வாகன வசதி பெருகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x