இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் அலைச்சல் விலகும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இடமாற்றமுண்டு.

மிதுனம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவரை கண்டறிவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திடாதீர். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: பணவரவு உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர். தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூ லாகும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

துலாம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு: சேமிப்பு கரையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தினரிடம் முன்கோபம் வேண்டாம். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவர்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வரும். சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். வேகத்தைவிட விவேகம் முக்கியம்.

கும்பம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.

மீனம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in