

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் பிறரின் உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும்.
பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை. உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும்.
பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம்: துர்கை அம்மனை வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ), சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூமி வீடு மனை லாபம் ஏற்படும். சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். அடுத்தவர்கள் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக நடக்கும். சுபச்செலவு அதிகரிக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீண் வாக்குவாதங்களை அகலும்.
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வீர்கள். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் அனைவரிடத்திலும் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும்.
பெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.
பரிகாரம்: சனி பகவானை வணங்க வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் பொது வாழ்க்கையில் புகழ் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு அனைத்து நேரத்திலும் உதவி செய்வீர்கள். வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது.
இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். வீடு மனை சம்பந்தமான இனங்களில் அனைத்து விதமான முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் கட்சியின் மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: நவக்கிரகத்தை வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |