Published : 19 May 2024 05:53 AM
Last Updated : 19 May 2024 05:53 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: திருமணம், வளைகாப்பு, குழந்தைக்கு காது குத்தி பெயர் வைக்க, வியாபாரம் தொடங்க, தங்க நகைகள் வாங்க, சொத்து விவகாரங்கள் பேசித் தீர்க்க, வாகனம் வாங்க, விற்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நல்ல நாள்.

சூரிய நமஸ்காரம் செய்வது அதிக நன்மைகளைத் தரும். துர்கை, காளி, மாரியம்மனுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து தீபம் ஏற்றினால் நோய்கள் குணமாகும். சூரிய காயத்ரி, ஆதித்ய ஹ்ருதயம் படித்தால் சோர்வு நீங்கி, உடல் புத்துணர்ச்சி பெறும்.

மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று நட்பை புதுப்பிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்து கட்ட முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பர்.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும். மதிப்பு உயரும்.

மிதுனம்: நெடுநாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். ஊழியர்கள் இணக்கமாக இருப்பர்.

கடகம்: நீண்ட நாள் கனவுகள் நனவாகும். விருந்தினர் வருகை யால் வீடு களைகட்டும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளின் சாதனைகளால் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கு வீர். பங்குதாரர்களின் ஆதரவுடன் வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

சிம்மம்: உற்றார், உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். பிள்ளைகளுக்கு நல்ல நிறுவனத்தில் பணி கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகம் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கன்னி: எடுத்த வேலையை அலைந்து திரிந்து முடிப்பீர். மனைவி வழியில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மதிப்பு உயரும்.

துலாம்: தடைகள் உடைபடும். கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

விருச்சிகம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். பணவரவு திருப்தி தரும். உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்ட பங்குதாரர்களை ஒதுக்குவீர். பணிச்சுமை கூடும். உத்தியோகத்தில் ஓரளவு நற்பலன் கிடைக்கும்.

தனுசு: நீண்டநாட்களாக தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்.பழைய வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் ஆதரவு கிட்டும். அதிகம் தொல்லை தந்த மேலதிகாரி உங்களிடம் பணிவார்.

மகரம்: புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்க்கவும்.

கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் பழைய பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

மீனம்: வீண் வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக் காதீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழக வும். வீண் விவாதம் தவிர்க்கவும். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலக ரீதியாக வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். எதிலும் நிதானம் அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x