

பொதுப்பலன்: தற்காப்பு கலைகள், யோகாசனம் பயில, மின்சார சாதனங்கள் வாங்க, அரசு அதிகாரிகளை சந்திக்க, நீர்நிலைகளை ஆழப்படுத்த, சொத்து விவகாரங்கள் பேச, மூலிகை மருந்துண்ண நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் முடிவெடுப்பீர். முக்கிய பிரமுகர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணம் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்புகள் சேரும்.
ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களை சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல் படுவர். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழி விலகி, அந்தஸ்து உயரும். பணவரவு திருப்தி தரும்.
கடகம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். பெரியவர்களின் சொல் பேச்சை கேட்டு செயல்படவும். வாகனம் செலவு வைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய பங்குதாரர்களுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அந்தஸ்து உயரும்.
சிம்மம்: புது வீடு, மனை வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கத்தினருடன் இணக்கமாகப் பழகவும். கூட்டுத்தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசவும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். உத்தியோகத்தில் புதிய பதவி எதிர்பார்க்கலாம்.
துலாம்: குழப்பம் நீங்கி, சுறுசுறுப்புடன் செயல்களை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்களின் ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் சூடு பிடித்து, லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் நீங்கள் தேடிக் கொண்டிருந்த முக்கிய ஆவணம் கிடைக்கும். மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். தொழிலில் போட்டி குறையும். பங்குதாரர் ஆதரவுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
தனுசு: மனக்குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.
மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். வழக்கில் இருந்துவந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். நகரின் முக்கிய இடத்தில் புதிய கிளை திறப்பீர்கள். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவார்கள். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். புதிய தொழில் தொடங்கவும் முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். புதிய பதவி உண்டு.
மீனம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பண வரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். ஊர் மக்களின் உதவியுடன் குலதெய்வம் கோயிலில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடப்பர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |