Published : 20 Apr 2024 06:12 AM
Last Updated : 20 Apr 2024 06:12 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: மதில் சுவர் கட்ட, தூண் அமைக்க, தானியத்தை களஞ்சியத்தில் சேர்க்க, கதிரறுக்க, நாட்டியம், இசை, ஓவியம் பயில, மூலிகை குளியல் செய்ய நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.

மேஷம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. மனஇறுக்கம் நீங்கும். முக்கிய பிரமுகர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் பொறுப்பு கூடும்.

ரிஷபம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். வியாபாரத்தில் மேன்மை உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பது நல்லது.

மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்வது நல்லதல்ல. அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார்.

கடகம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியா பாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர்கள். அலு வலகத்தில் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

சிம்மம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடி வெடுக்கப் பாருங்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போக வும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள் வீர். உத்தியோகத்தில் குழப்பங்கள் ஏற்படும். சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். பழைய வழக்குகளை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்திப்பீர்கள். புதிய வேலை தொடர்பாக நிறைய அலைச்சல் இருக்கும்.

துலாம்: வேற்று மொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். மனைவிவழி தந்தைவழி உறவினர் களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்தி களை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர் கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு தேர்ந் தெடுக்கப்படுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

தனுசு: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். நீண்ட நாளாக இழுபறி யாக இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். யோகா, தியானத்தில் மனம் செல்லும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்க முயற்சிப்பீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கும்பம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த அயல் நாட்டு பயணம் அமையும். குடும்பத்துடன் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். கௌரவ பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

மீனம்: ஒருவருக்கொருவர் மீது இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர் களால் நல்லது நடக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். விரயச் செலவு குறையும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x