Published : 05 Apr 2024 07:00 AM
Last Updated : 05 Apr 2024 07:00 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: புத்தங்கள் வெளியிட, தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க, அடுப்பு,யாக சாலை அமைக்க, வழக்கு பேசித் தீர்க்க, கடன் பைசல் செய்ய, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்க, குழந்தையை தத்தெடுக்க, அன்ன தானம் செய்ய நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் எள் அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். அன்னபூர்ணாஷ்டகம், ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேஷம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். பழுதான பொருட்களை மாற்றிவிட்டு, வீட்டை புதிய பொருட்களால்
அலங்கரிப்பீர். அலுவலகத்தில் உங்கள் தரம் ஒருபடி உயரும். வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
அரசு காரியங்களில் வெற்றியுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

மிதுனம்: கடந்த கால நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

கடகம்: அவசரப்படாமல் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். சாதனை மனிதர்களின் நட்பு கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசிப் பழகவும்.

கன்னி: மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து ஏற்றம் பெறுவீர்.

துலாம்: சொந்தம் பந்தங்களிடையே மதிப்பு கூடும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரும். சகோதரர்கள் மோதல் போக்கை கைவிட்டு அன்பாக இருப்பர். பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தாயார், பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் தானாக வந்து சேரும்.

தனுசு: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்க தொடங்குவீர்கள். பூர்வீக சொத்து வழக்குகள் சாதக மாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

மகரம்: எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் கடையை மாற்றியமைப்பீர்கள்.

கும்பம்: எதையும் சாதிக்கும் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மனக் குறைகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் உண்டு.

மீனம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பழுதான சாதனங்களை மாற்றுவீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x