Published : 12 Dec 2023 05:45 AM
Last Updated : 12 Dec 2023 05:45 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். தாயார் உடல்நலத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும்.

ரிஷபம்: மனதில் தெளிவு பிறந்து, உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர். அழகு, இளமை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். நண்பர்களுடன் புதிய தொழில் தொடங்குவீர்கள்.

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.பணவரவு உண்டு.பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும்.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.

கன்னி: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மன இறுக்கம் நீங்கும். முக்கிய பிரமுகர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர்.

துலாம்: தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். நீண்ட நாளாக பேசாத உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

விருச்சிகம்: மனைவிவழி உறவினர் மத்தியில் மறைமுக அவமானம் ஏற்படும். குலதெய்வ கோயில் முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.

தனுசு: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும்.

மகரம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகனுக்கு அயல் நாட்டு பயணம் ஏற்படும். கலை பொருட்கள் சேரும்.

கும்பம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர். முக்கிய பிரமுகர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர் . உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

மீனம்: நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x