Published : 11 Dec 2023 05:50 AM
Last Updated : 11 Dec 2023 05:50 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சகோதர உறவுகளுடன் மனவருத்தம் வந்து நீங்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும். மின் சாதனங்கள் பழுதாகும். மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக கையாள்வது அவசியம்.

ரிஷபம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் நம்பிக்கை, புது தெம்பு பிறக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும்.

மிதுனம்: வழக்குகளில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் நடந்து முடியும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய பதவி, பொறுப்புகள் தேடிவரும்.

சிம்மம்: உங்களிடம் இருந்த சோர்வு, களைப்பு நீங்கும். உற்சாகமாக புது முயற்சியில் இறங்குவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். பேச்சில் பொறுமை தேவை.

கன்னி: தைரியமாக செயல்பட்டு, முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினை சுமுகமாக தீரும்.

துலாம்: விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய நபர்களால் நல்லது நடக்கும். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.

விருச்சிகம்: யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். சொந்த ஊர் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வெளி உணவை தவிர்ப்பது நல்லது.

தனுசு: அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

மகரம்: எதிர்பார்த்த வகையில் பண வரவு உண்டாகும். நண்பர்களிடம் இருந்த பகை உணர்வு நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களால் ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு உண்டாகும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள்.

மீனம்: தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிலம், வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x