Published : 08 Aug 2023 05:35 AM
Last Updated : 08 Aug 2023 05:35 AM
மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நன்மை பயக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போவது நல்லது. எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்தவும்.
ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். பணவரவு உண்டு.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பால்ய நண்பர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். மகன், மகளின் கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும். பழைய கடன்களில் ஒன்று தீரும்.
சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பணவரவு உண்டு.
துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்றுமதத்தவர்களால் நன்மை உண்டு.
விருச்சிகம்: உங்கள் மீதான வீண்பழி தீர்ந்து, குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சேவை மனப்பான்மை அதிகரிக்கும்.
தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நட்பு வட்டம் விரியும். குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மகரம்: அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். திட்டமிட்டபடி சில செயல்கள் நடந்தேறும்.
கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT