Published : 21 Jul 2023 05:32 AM
Last Updated : 21 Jul 2023 05:32 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிது வாங்குவீர்கள். வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும்.

மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவு இருக்கும். உறவினர்கள், சகோதர வகையில் மனநிம்மதி கிட்டும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: பெரியளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புதுவாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். மகளுக்கு திருமணம் நடந்தேறும்.

சிம்மம்: தேவையில்லாத விஷயத்துக்கு எல்லாம் உணர்ச்சிவசப்படுவீர்கள். அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். முன்கோபப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பணவரவு உண்டு.

கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். பேசாமலிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் உதவிகரமாக இருப்பர்.

விருச்சிகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். சீமந்தம், திருமணம் என்று விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

தனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆறுதலாக இருப்பர். வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

மகரம்: சின்னதாக ஒருவித சலிப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துபோகும். சிறிது நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. நண்பர்கள், உறவினர்களை சந்திக்க முயலவும். வழக்கில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாளாக சந்திக்காத நண்பரை சந்திப்பீர். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். மற்றவரிடத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x