Published : 25 Jun 2023 05:47 AM
Last Updated : 25 Jun 2023 05:47 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

ரிஷபம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். வீட்டுக்குத் தேவையான மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வீட்டில் மாலை முதல் மகிழ்ச்சி தொடங்கும்.

கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். மாலை முதல் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

துலாம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். பணவரவு உண்டு.

தனுசு: எதிரிகளின் ஆட்டம் அடங்கும். கணவன் - மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். புதிய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி எளிதில் கிடைக்கும்.

மகரம்: உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. உறவினர்களால் அன்புத்
தொல்லை உண்டு. மாலை முதல் தடைகள் ஒவ்வொன்றாக விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும்.

கும்பம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். மாலை முதல் எதிலும் நிதானித்து செயல்படப் பாருங்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பர்.

மீனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகனச் செலவுகள் நீங்கும். பழைய கடன்களில் ஒன்று தீரும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x