

படம்: எஸ்.சத்தியசீலன்
தமிழில் நாயன்மார்கள், ஆழ் வார்களால் பாடப்பட்ட பாடல் களின் சிறப்புகள், அவற்றின் உட் பொருள்களை எடுத்துக்கூறும் வகையில் அமைந்த 'தெய்வத்தமிழ் நாயன்மார்களும் ஆழ்வார்களும்' என்கிற நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நேற்று தொடங்கியது.
இதில், தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பில், பேச்சுக் கச்சேரி - 2025 என்ற தலைப்பில் 2 நாட்கள் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது. பத்மபிரியா பத்ரி, ரீதி முராரி குழுவினரின் 'திருநாளைப் போவாரும் தில்லைச் சபாநாய கரும்' என்ற நாட்டிய நாடகத் துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து, 'நாயன்மார்கள் சரித்திரம்' என்ற தலைப்பில் உரையாற்றிய ரஜனி அர்ஜுன் சங்கர், பெரிய புராணத்தின் சில பாடல்களைப்பாடி விளக்கம் அளித்தார்.
பல்வகை மொழிகளில் பக்த சரிதம்' என்ற தலைப்பில் பேராசிரியர் ஜி.சங்கரநாராயணனும் சைவம் வளர்த்த செந்தமிழ்' என்ற தலைப்பில் முனைவர் சே.ரகுராமனும் உரையாற்றினர். 'மாதேவன் வார்கழல்கள் வாழ்த் திய வாழ்த்தொலி என்ற தலைப் பில் முனைவர் மதுசூதனன் கலைச்செல்வன் - வெ.ராஜ கோபாலன் இடையே உரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, 'நாயன் மார்கள் காலச் சமூக நிலை' எனும் தலைப்பில் உரையாற்றிய சௌந்திர. சொக்கலிங்கம், தமிழகத்தில் சைவம், சமணம் தோன்றி வளர்ந்த காலம் குறித்த தன்னாய்வை நாயன்மார்கள் பாடல்கள் கொண்டு விளக்கிப் பேசினார். மனிதன் இன்பமாக வாழ்வதை சைவம் முன்னிறுத்து வதாகக் கூறினார்.
இன்றைய இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், டி.எஸ். கிருஷ்ணன், முனைவர் சுதா சேஷய்யன், பேராசிரியர் ம.பெ.ஸ்ரீனிவாசன், என்.எஸ். ரங்கநாதன் ஆகியோரின் உரைகளோடு துஷ்யந்த் ஸ்ரீதர் உடனான முனைவர் பத்ரி சேஷாத்ரியின் உரையாடல், 'திருப்பாணாழ்வாரும் திருவரங்கனும்' என்கிற நாட்டிய நாடகம் ஆகியவையும் நடைபெறுகின்றன.