Last Updated : 20 Feb, 2014 12:00 AM

 

Published : 20 Feb 2014 12:00 AM
Last Updated : 20 Feb 2014 12:00 AM

நாகரிகத்தின் தொட்டில் நாகை மாவட்டம்- கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்

தொன்மை சிறப்பில் நாகப்பட்டினம் மாவட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பழங்கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்காலம் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் என்று இன்றுவரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் இம்மண்ணில் இன்னமும் விரவிக் கிடக்கிறது.

குத்தாலம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப் பட்ட புதிய கற்கால ஆயுதமான கற் கோடரி சிந்து சமவெளி நாகரிகத்துக்கு சிறிதும் குறைந்ததில்லை. காவிரிக் கரை நாகரிகம் என்பதை உலகுக்கு உரத்துச் சொன்னது அது. பூம்புகாரின் எச்சங்களும், தலைச்சங்காடு அகழாய்வும் எல்லா நாகரிக வளர்ச்சியின்போதும் இங்கேயும் அதற்கு சற்றும் குறையாத வளர்ச்சி அதே விகிதத்தில் இருந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

சிவப்பு நிற ஓவியம்

அந்த சான்றுகளுக்கு இன்னமும் அதிக வலுசேர்க்கும் விதமாக சீர்காழி அருகே யுள்ள எடமணல் மேலப்பாளையம் கிராமத்தில் கிடைக்கும் விதவிதமான முதுமக்கள் தாழிகள் உள்ளன எனலாம். அளவுகளில் வேறுபட்டதாக காலத் தால் மாறுபட்டதாக விதவிதமாக கிடைக்கும் முதுமக்கள் தாழிகளில் இருந்து கத்தி, ஈட்டி, உணவுக்கலங்கள், விளக்குகள், கல்மணிகள், வெண்கல கிண்ணம் என்று பல்வகை பொருட்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், தற் போது கிடைத்திருக்கும் ஒரு மட்கல யத்தில் காணப்பட்ட சிவப்பு நிற ஓவியம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வியக்க வைக்கும் தொழில்நுட்பம்

பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்டிருக்கும் அந்த மட்கலயம் புவியீர்ப்பு விசையைச் சமாளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. தஞ்சா வூர் தலையாட்டி பொம்மை போல அந்த மட்கலயத்தை எப்படி ஆட்டி விட்டாலும் கீழே விழாமல் ஆடி, திரும்பவும் நேராக நின்றுவிடும் அதன் தொழில்நுட்பம் வியக்கத் தக்கதாய் இருக்கிறது.

ஆனால், அதையும்விட அதிக வியப்புக்குரியதாகவும், ஆச்சர்யத்துக் குரியதாகவும் அமையக் கூடியது அந்த மட்கலயத்தில் உள்ள ஓவியம்.

பெருங்கற்கால சூலம்…

இதை கண்டறிந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் கூறும் போது, “இந்த மட்கலயத்தில் பெருங் கற்கால சூலம் போன்ற குறியீடு காணப் படுகிறது. இதுபோன்ற குறியீடுகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத் திருக்கிறது என்றாலும் அதைவிட சிறப் பான இன்னொரு ஆச்சர்யமும் இந்த மட்கலயத்தில் இருக்கிறது. அது ஒரு ஓவியம். சிவப்பு நிறத்தில் கிளைக ளோடு கூடிய ஒரு மரம் அந்த ஓவியத் தில் உணர்த்தப்பட்டிருக்கிறது. அதற் கான விளக்கம் ஆராயப்பட வேண்டிய அதேநேரத்தில் இன்னொரு விஷயத் தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

அவர்கள் வாழ்ந்த அந்த கால கட் டத்தில் சிவப்பு நிறம் என்பது மங்கள கரமான காரியங்களை உணர்த்தும் விதமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டி ருக்கிறது.

ஆனால், இங்கோ இறந்தவர் களை, இறக்கப் போகிறவர்களை வைக்கும் அமங்களகரமான தாழியில் வைத்த மட்கலயத்தில் எப்படி சிவப்பு நிறத்தை குறித்தார்கள் என்பதுதான் மிகப்பெரிய விவாதத்துக்குரியது. சிவப்பு நிறத்திலான இந்த ஓவியம் தமிழகத்தில் இதுவரை வேறு எங்கும் கிடைக்கவில்லை” என்கிறார்.

வேறுபடுத்திக் காட்டுவதற்கு…

சென்னையைச் சேர்ந்த கலை வர லாற்று ஆய்வாளர் காந்திராஜன் இது குறித்து விளக்குகிறார்: “தங்கள் கூட்டத்தின் தலைவனையோ அல்லது மதத் தலைவனையோ மற்றவர்களிடமி ருந்து வேறுபடுத்திக் காட்ட இப்படி சிவப்பு நிற குறியீட்டைப் பயன் படுத்தியிருக்கலாம்.

மண்ணில் சிவப்பு நிற குறியீடு வரைந்து பிறகு அதை சுட்டிருக்கிறார் கள். இந்த பகுதியில் கிடைக்கும் தாழி கள், வெண்கல கிண்ணங்கள், வட்டில் களைப் பார்த்தால் இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்க ளைக் கற்றுப் பயன்படுத்தியிருக்கிறார் கள் என்பது தெரிகிறது” என்கிறார்.

இப்படி அடுக்கடுக்காய் ஆதாரங் கள் கிடைத்தாலும் இன்னமும் அந்த பகுதியில் தொல்பொருள் துறையின் கவனம் திரும்பவில்லை. பொக்கிஷங் களைப் போற்றி பாதுகாப்பதில் இங்கு யாருக்கும் அக்கறையில்லை என்பதுதான் வேதனை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x