

தைத் திருநாள்.. உறவுகளும், நட்பும் உளமாற வாழ்த்தி மகிழும் தருணம்.. மண்ணும் மனமும் குளிரும் பொன்னான தருணம்..
தருணங்களைத் தவற விடாமல் புகைப்படமாய் பதிவு செய்பவரா நீங்கள்..?
உங்கள் விரல்நுனியில் ஒரு வெற்றி வாய்ப்பு..!
மண், மண்ணின் மரபு சார்ந்த காட்சிகள், விவசாயம், நாட்டுப்புற கலைகள், வண்ணக் கோலங்கள்.. என மண் மணம் கமழும் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்.
இந்த பண்டிகைக் கால கொண்டாட்டத்தை, நிகழ்வுகளை புகைப்படமாய் பதிவு செய்து அனுப்புங்கள்.. தேர்ந்தெடுக்கப்படும் உங்கள் படைப்பு உங்கள் பெயருடன், நம் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்படும்.
அதிக 'Like' / 'Share' பெறும் படங்கள் - அகிலம் முழுதும் வலம் வரும்.
அசத்தலான பரிசுகள் காத்திருக்கின்றன.. அள்ளிச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.!
எப்படி அனுப்புவது ? : நீங்கள் எடுக்கும் புகைப்படத்தை webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அல்லது, நம் முகநூல் பக்கத்துக்கு (>https://www.facebook.com/TamilTheHindu) (Message Inbox) அனுப்புங்கள். தயவுசெய்து Comments பகுதியில் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டாம்.
புகைப்படத்தை அனுப்பும்போது 01. உங்கள் பெயர் 02. தொடர்பு எண் 03.மின்னஞ்சல் முகவரி 04. புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் ஆகியவற்றைத் தவறாமல் குறிப்பிடவும். புகைப்படம் / புகைப்படங்கள் உங்களால் பதிவு செய்யப்பட்டது என்ற உறுதிமொழியையும் அனுப்பவும். Message Inbox-ற்கு புகைப்படத்தை மேற்கண்ட தகவல்களோடு அனுப்பினால்மட்டுமே, புகைப்படம் இந்த போட்டிக்கு பரிசீலனை செய்யப்படும்.
கடைசித் தேதி : படங்களை அனுப்ப கடைசித் தேதி : 21.01.2014 ( இந்திய நேரப்படி இரவு 8 மணி வரை )
பரிசுகள் உங்கள் புகைப்படத்திற்காக காத்திருக்கின்றன!
விதிகள் :
01. போட்டிக்கு நீங்கள் எடுத்த புகைப்படத்தை மட்டுமே அனுப்ப வேண்டும். மற்றவர் எடுத்த புகைப்படத்தை அனுப்பக் கூடாது.
02. புகைப்படம் 13 ஜனவரி 2014-க்குப் பிறகு எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
03. இது குலுக்கல் முறையில் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியல்ல. திறமையின் அடிப்படையிலான போட்டியே.
04. 'தி இந்து'வின் மூத்த புகைப்படக் கலைஞர்கள் குழு பரிசுக்குரிய சிறந்த புகைப்படத்தை தேர்வு செய்வார்கள்.
05. ‘பொங்கல் புகைப்படப் போட்டி’ தொடர்பான வாசகர்களின் தீர்ப்பாக, அதிக 'Like' / 'Share' எண்ணிக்கைகளும் உங்கள் புகைப்படம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
06. வெற்றி பெற்றதாக தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களுக்கான பரிசுகள், சென்னை அண்ணாசாலையில் உள்ள 'தி இந்து' அலுவலகத்தில் வழங்கப்படும்.
07. 'தி இந்து' தேர்வுக்குழுவின் தீர்ப்பே முடிவானது.
08. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் இந்த போட்டிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.
09. வழக்குகள் சென்னை நீதிமன்ற எல்லைக்கு உட்பட்டது.