நாடக மேடை: யாவருக்குமாம் ஒரு காதல்

நாடக மேடை: யாவருக்குமாம் ஒரு காதல்
Updated on
1 min read

நாடகங்கள் குறைந்து வரும் இக்காலத்தில் நகைச்சுவையை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே அரங்கம் நிரம்பிய காட்சிகளைப் பார்க்க முடிகிறது. அத்தகைய நாடகமாய் அமைந்துள்ளது ‘யாவருக்குமாம் ஓரு காதல்’. ஆனந்த் ராகவ் எழுதியுள்ள இந்நாடகத்தை ஜி.கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இதனை ஷ்ரத்தா குழுவினர் சிரத்தையாக வழங்கியுள்ளனர்.

இந்நாடகத்தினை முழுமையாகத் தன் தோளில் சுமந்திருப்பதால் காத்தாடி ராமமூர்த்திதான் ஹீரோ. வெவ்வேறு குடும்ப பெண்ணும் பிள்ளையும் அமெரிக்காவில் காதலிக்க, அவர்களின் அம்மாவும், அப்பாவும் இங்கே காதலிப்பதுதான் கதை. காத்தாடி ராமமூர்த்தி கையில் நூல் முனை. நன்றாக பட்டம் விடுகிறார். இன்று தான் மேடை ஏறியது போல உற்சாகமாக நடிக்கிறார். இல்லை, கதாபாத்திரமாகவே வாழ்கிறார். டாக்டர் ரோமியோ (சுவாமி நாதன்), விவாகரத்து வக்கீல் ( ஹேமலதா), அபிநயா (கரிஷ்மா), ஆதித்யா (ஆனந்த்), ரோகன் ஐயர் (நிழல்) ஆகிய இளைஞர் பட்டாளம் மேடையில் தோன்றுகின்றனர். பெரியவர்களின் காதல் கலந்துரையாடல் சீன் மட்டும் கொஞ்சம் தொய்கிறது. மற்றபடி சிரிப்புச் சரவெடிதான்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in