இசை, நாடகப் பிரிவில் கலைக்குழுக்களை பதிவு செய்யலாம்: ஒலிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு

இசை, நாடகப் பிரிவில் கலைக்குழுக்களை பதிவு செய்யலாம்: ஒலிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு
Updated on
1 min read

பத்திரிகைத் தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கலைக் குழு, நாடகக் குழு, ஒருங்கிணைந்த குழு, நாட்டுப்புற இசைக் குழு, புராண இசைக் குழு, பொம்மலாட்டக் கலைக்குழு ஆகிய குழுக்கள் மத்தியத் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில் கீழ் செயல்பட்டு வரும் இசை நாடகப்பிரிவில் தங்களைப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலைக் குழுவில் உள்ள கலைஞர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்துள்ள தனியார் கலைக் குழுக்களும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 21.1.2014 ஆகும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இணை இயக்குநர் இசை மற்றும் நாடகப் பிரிவு எண்.9, 4வது தெரு, டாக்டர் சுப்பராயன் நகர் சென்னை 600024 தமிழ்நாடு என்ற முகவரிக்கும் 044 24880458 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in