Published : 20 Feb 2014 06:48 AM
Last Updated : 06 Jun 2017 07:47 PM
லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினர் இசைக்க, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடும் 'SPB - Live in Chennai' திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி சென்னை, காமராஜர் அரங்கில் 22.02.2014 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
‘தி இந்து’இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை நம் வாசகர்களும் கண்டு ரசிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு போட்டியை அறிவிக்க உள்ளோம்.
நம் ஃபேஸ்புக் பக்கத்தில் இப்போட்டிக்கான கேள்விகள் 3 நாட்கள் (20, 21 மற்றும் 22.02.2014) கேட்கப்படும். சரியான பதில் அளித்து, பரிசுகளை வெல்ல உங்களை அழைக்கிறோம்.
போட்டி பற்றிய மற்ற விவரங்கள்.. விரைவில்!
போட்டிக்கான விதிகள்:
01.இது அதிர்ஷ்டப் போட்டியல்ல. வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அறிவின் அடிப்படையில் இப்போட்டிக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
02. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசாக ஒவ்வொருவருக்கும் 'SPB - Live in Chennai' இசை நிகழ்ச்சிக்கான 2 டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
03. சரியான விடையை பலர் அளிக்கும்பட்சத்தில், முதலில் சரியான விடை அனுப்புபவர்கள் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
04. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது உண்மையான பெயரில் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும். போட்டியில் வெற்றிபெற்றால், மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
வெற்றியாளர் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்படும். வெற்றியாளர் சென்னை அண்ணா சாலை, 859 & 860 இலக்கத்தில் அமைந்துள்ள ‘தி இந்து’ அலுவலகத்திற்கு வந்து, தன் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் காட்டி, டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ( நாள்: 22.02.2014 (சனிக்கிழமை) நேரம்: காலை 10.30 மணி முதல் மாலை 5 மணிக்குள்)
05. போட்டிக்கான விடைகளை online.cinema@kslmedia.in என்ற மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்பவேண்டும். அந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் பதில்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
06. இப்போட்டியில் ‘தி இந்து’வின் தீர்ப்பே இறுதியானது.
07. வழக்குகள் சென்னை நீதிமன்ற எல்லைக்கு மட்டுமே உட்பட்டவை.
Sign up to receive our newsletter in your inbox every day!