Last Updated : 08 Feb, 2015 12:17 PM

 

Published : 08 Feb 2015 12:17 PM
Last Updated : 08 Feb 2015 12:17 PM

9 பொதுத்துறை வங்கிகளில் அரசு ரூ. 6,990 கோடி முதலீடு

ஒன்பது பொதுத்துறை வங்கிகளின் நிதி ஆதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 6,990 கோடியை விடுவிக்க உள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்குள் இந்தத் தொகை விடுவிக்கப்படும் என அரசு அறிவிக்கை தெரிவிக்கிறது.

சிறப்பாகச் செயல்படும் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு நிதி ஆதாரத்தை மேம்படுத்த முதலீடு செய்வதென இந்த ஆண்டு முதல் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிறப்பாக செயல்படும் வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அளிக்கப்படுகிறது. இதன்படி 9 வங்கிகளுக்கு இந்தத் தொகை அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,970 கோடி, பாங்க் ஆப் பரோடாவுக்கு ரூ. 1,260 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. 870 கோடி, கனரா வங்கிக்கு ரூ. 570 கோடி, சிண்டிகேட் வங்கிக்கு ரூ. 460 கோடி, அலாகாபாத் வங்கிக்கு ரூ. 320 கோடி, இந்தியன் வங்கிக்கு ரூ. 280 கோடி, தேனா வங்கிக்கு ரூ. 140 கோடி, ஆந்திர வங்கிக்கு ரூ. 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2014-15) பொதுத்துறை வங்கிகளின் நிதி ஆதாரத்தை மேம்படுத்த ரூ. 11,200 கோடி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்திய வங்கிகள் சர்வதேச அளவீட்டின்படி பேசல்-3 நிலையை எட்டுவதற்கு ரூ. 2.4 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இந்த நிதி அளவை 2018-ம் ஆண்டுக்குள் எட்டியாக வேண்டும்.

தற்போது வங்கிகளுக்கு ஒதுக் கப்பட்டுள்ள நிதி அளவானது, அவற்றின் செயல்பாட்டின் அடிப் படையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சொத்து ஈட்டும் சராசரி வருவாய் (ஆர்ஓஏ) அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளை அடிப்ப டையாகக் கொண்டு ஒதுக்கீடு செய் யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.

அடுத்தபடியாக கடந்த நிதி ஆண்டில் வங்கிகளின் பங்கு ஈட்டு சராசரி வருவாய் (ஆர்ஓஇ) அடிப்படையிலும் ஒதுக்கீட்டு அளவு கணக்கிடப்பட்டுள்ளது.

சீர்திருத்தங்கள் தேவை

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளில் மிகப் பெரு மளவிலான சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டியுள்ளதை அரசு உணர்ந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே வங்கித் தலைவர்கள் பங்கேற்ற கியான் சங்கம் எனும் இரண்டு நாள் மாநாடு கடந்த மாதம் புனேயில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதனடிப்படையில் சிறப்பாகச் செயல்படும் வங்கிகளின் மூல தனத்தை அதிகரித்து அவற்றின் செயல்பாடுகளை ஊக்குவிப்ப தென அப்போது முடிவு செய் யப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும், அவை சிறப்பாக செயல்படாவிட்டாலும் அரசு முதலீடு செய்து வந்தது. ஆனால் இந்த ஆண்டிலிருந்து இந்த நடைமுறை மாற்றப்பட்டு சிறப்பாக செயல்படும் வங்கிகளே அரசின் உதவியைப் பெற முடியும் என்பதை உணர்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x