Published : 10 Feb 2015 11:38 am

Updated : 10 Feb 2015 11:38 am

 

Published : 10 Feb 2015 11:38 AM
Last Updated : 10 Feb 2015 11:38 AM

உக்ரைன் உள்நாட்டுப் போர் பெலாரஸில் நாளை அமைதி பேச்சு

உக்ரைன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் பெலாரஸில் நாளை சந்தித்துப் பேசுகின்றனர்.

கிழக்கு உக்ரைனில் கடந்த சில வாரங்களாக நடைபெறும் சண்டையை நிறுத்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரும் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷேன்கோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை அண்மையில் சந்தித் துப் பேசினர். அப்போது இருதரப் புக்கும் ஏற்றுக் கொள்ளும் வகை யில் 12 அம்ச சண்டை நிறுத்த ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் நாளை சந்தித்துப் பேச உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யாஉக்ரைன்ஜெர்மனிபிரான்ஸ்சந்திப்பு

You May Like

More From This Category

More From this Author