Published : 23 Feb 2015 10:42 am

Updated : 23 Feb 2015 10:49 am

 

Published : 23 Feb 2015 10:42 AM
Last Updated : 23 Feb 2015 10:49 AM

புதுச்சேரியில் நாய் கண்காட்சி

புதுச்சேரியில் முதன் முறையாக இந்தியா கேனல் கிளப் மற்றும் மெட்ராஸ் கொனையன் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி மற்றும் போட்டி உப்பளத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாட்டு இனங்களை சேர்ந்த 40 வகையான நாய்கள் பங்கேற்றது. இதில் வெளிநாட்டு வகைகளான ஆப்கன் ஹவுண்ட், டெரியர், பக், ஸ்னூசர், பூடுல் மற்றும் இந்திய வகைகளான கோம்பை, கன்னி, சிப்பிபாறை, ராஜபாளையம் ஆகிய வகைகளை சேர்ந்த நாய்கள் இடம்பெற்றன.

மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட நாய்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சுமார் 180 நாய்களுக்கு 4 பிரிவு களில் போட்டி நடத்தப்பட்டது. பொம்மை, வேலை, ரோந்து, டெரி யர் ஆகிய பிரிவுகளில் தங்களது உரிமையாளர்களுடன் நாய்கள் கலந்து கொண்டன. நாய்களின் ஆரோக்கியம், பழக்க வழக்கம் ஆகியவற்றை மதிப்பிட்டு தேர்ந் தெடுக்கப்பட்டன. போட்டியின் நடுவராக சுதர்சன், ஷ்யாம் மேத்தா, யசோதா, ஹேம சந்திரா ஆகியோர் செயல்பட்டனர்.

ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த நாய்களுக்கு நிறைவு விழாவில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ுதுச்சேரிஇந்தியா கேனல் கிளப் மற்றும் மெட்ராஸ் கொனையன் கிளப்தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி

You May Like

More From This Category

More From this Author