Last Updated : 19 Feb, 2015 10:18 AM

 

Published : 19 Feb 2015 10:18 AM
Last Updated : 19 Feb 2015 10:18 AM

அந்நிய முதலீடுகளை ஈர்க்க மேலும் பல சீர்திருத்தங்கள்: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

அந்நிய முதலீடுகளை ஈர்க்க, பட்ஜெட்டிலும் வரும் தினங்களிலும் மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று முன்தினம் இரவு இந்தியர்கள் மத்தியில் சுஷ்மா ஆற்றிய உரை பின்வருமாறு:

இந்தியாவை முதலீடு மற்றும் உற்பத்திக்கான கேந்திரமாக மாற்றுவதற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ பிரச்சார இயக்கம் தொடங்கியது முதல் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2014-ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியருக்கான நிதியம் அமைக்கப்பட்டது. கங்கை நதியை சுத்தப்படுத்தி மேம்படுத்தவும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேற்கொள்ளவும் இந்த நிதியம் அமைக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முயற்சியில் இணையும்படி வெளிநாட்டவருக்கும், வெளிநாடு வாழ் இந்திய தொழில்முனை வோருக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. புதிய அரசு ஏற்கெனவே பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. வரும் பட்ஜெட் உட்பட Z காலத்தில் மேலும் பல சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ளும்.

இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க அரசு திட்ட மிட்டுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்கலாம். மேலும் கட்டுமா னம், ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீட்டு .வரம்பும் தளர்த்தப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகத்துடன் நாட்டை முன்னேற்ற மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது. வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்க பாடுபடுகிறோம். இதில் நல்லதொரு மாற்றத்தை நாட்டில் இப்போதே உணர முடிகிறது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மக்கள் தனி கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை வழங்கி யுள்ளனர். எனவே கடந்த பொதுத் தேர்தல் வரலாற்றுச் சிறப்பு மிக்க தாகும்.

இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இடம் இருக்கிறது என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நிதி, அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்க உதவுகிறது. இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

இந்தியா ஓமன் இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 60 ம் ஆண்டு விழா இந்த ஆண்டு கொண் டாடப்பட உள்ளது.

இந்நிலையில் முதல் முறையாக ஓமன் வந்துள்ள சுஷ்மா, 60-ம் ஆண்டு விழா இலச்சினையை வெளியிட்டார்.

இந்தியர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக ஓமன் ஆட்சியாளர் களுக்கு சுஷ்மா தனது உரையில் பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x