Published : 01 Jan 2015 10:44 AM
Last Updated : 01 Jan 2015 10:44 AM

நலத்திட்ட உதவிகள் கிடைக்க பள்ளிகளில் சிறப்பு பணியாளரை நியமிக்க வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

அரசு நலத்திட்ட உதவிகள் மாணவர்களுக்கு உரிய காலத்தில் கிடைக்க வசதியாக ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு பணியாளரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் புதிய மாநில அலுவலகம் சென்னை தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக் கத்தில் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தின் திறப்புவிழா, கோரிக்கை மாநாடு, கல்விக் கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா ஊரப்பாக்கத்தில் நடை பெற்றது.

பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாநில அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து, மாநிலத் தலைவர் வே.நடராசன் தலைமை யில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர் ஏ.கருப்பசாமி, மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சிறப்பு கல்வி திட்ட துணை இயக்குநர் கி.மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அதன்பிறகு ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற தலைப்பில் நடந்த கல்விக்கருத்தரங்கில் மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜ கோபாலன், முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி, ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் எம்.ஃபில் உயர்கல்வித்தகுதிக்கு ஊக்க உயர்வு வழங்க வேண்டும்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதால் பள்ளிகளை ஆய்வுசெய்ய வசதி யாக கூடுதல் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் காலியாக வுள்ள இளநிலை உதவியாளர், பள்ளி காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் மாநில பொருளாளர் பி.நடராஜன், மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.மோகனசுந்தரம் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x