Published : 28 Jan 2015 10:47 AM
Last Updated : 28 Jan 2015 10:47 AM

நீதிபதி பால் வசந்தகுமாருக்கு பிரிவு உபசார விழா: பிப். 2-ல் ஜம்மு- காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். பால் வசந்தகுமாருக்கு நேற்று பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

வரும் திங்கள்கிழமை (பிப். 2), ஜம்மு- காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்கவுள்ளார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற கூட்டரங்கில் அவருக்கு நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.

தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் வாழ்த்திப் பேசினார். தமிழக அட்வகேட் ஜெனரல் சோமையாஜி பாராட்டுரை வழங்கினார். உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், நீதிபதி பால் வசந்த குமார் ஏற்புரையாற்றும்போது, ‘தடை எதுவும் இல்லாதபட்சத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் விரைந்து நிறை வேற்ற வேண்டும். உத்தரவு பிறப் பிப்பதுடன் நீதிமன்றத்துக்கு கடமை முடிந்துவிடுவதில்லை. அந்த உத்தரவு அமல்படுத்தப் படுகிறதா என்பதை கண்காணிக் கவும் வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் நான் கண்டிப்புடன் தான் இருப்பேன். இருந்தாலும், அட்வகேட் ஜெனரல், அரசு வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பால் எந்த அதிகாரியையும் தண்டிக்காத வகையில் நான் பணியாற்றினேன். இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்’ என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பால் வசந்தகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 9 ஆண்டுகள் ஒரு மாதம் நீதிபதியாகவும் பணியாற்றியுள் ளார். இவர் மொத்தம் 91,500 வழக்குகளை முடித்துவைத் துள்ளார். இதில், 45,770 வழக்குகள் பிரதான வழக்குகளாகும். இவர் அளித்த தீர்ப்புகளில் 2 ஆயிரம் தீர்ப்புகள் சட்ட இதழ்களில் இடம்பெற்றுள்ளன.

நீதிபதி பால் வசந்தகுமாரின் மனைவி தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியர். மகள் முதுகலை மருத்துவமும், மகன் சட்டப் படிப்பு இறுதியாண்டும் படிக்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பால் வசந்தகுமார், ஜம்மு- காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரும் திங்கள்கிழமை (பிப்.2) பொறுப் பேற்கவுள்ளார். இதனால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கள் எண்ணிக்கை 42 ஆக குறைந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 18 ஆக உயரும்.

நீதிபதி எஸ்.கே. கவுல், தனது சொந்த மாநிலமான ஜம்மு- காஷ்மீரில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக வந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x