Published : 12 Jan 2015 17:44 pm

Updated : 12 Jan 2015 17:44 pm

 

Published : 12 Jan 2015 05:44 PM
Last Updated : 12 Jan 2015 05:44 PM

கர்ப்பிணியை இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம்: ஒடிசா அரசிடம் விரிவான அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

கர்ப்பிணி பெண்ணான தன்னை அடித்து உதைத்தாக ஒடிசாவின் கஞ்சம் மாவட்ட போலீஸ் அதிகாரி மீது பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, அம்மாநில அரசிடம் விரிவான அறிக்கையை மத்திய அரசு கேட்டுள்ளது.

கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி உதைத்ததால்தான் சம்பவத்தன்றே குழந்தைப் பெற நேர்ந்தது என்று மத்திய அரசிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஒடிசா அரசிடம் மத்திய அரசு விரிவான அறிக்கை கேட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து ஒடிசா உள்துறை அமைச்சகம், உள்துறை செயலாளரிடம் இச்சம்பவம் குறித்த உண்மையான விவரங்களை அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ள கடித நகலை மூத்த பாஜக தலைவர் ராம் சிந்திரா பண்டா செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

இரு மாதங்களுக்கு முன் இச்சம்பவம் குறித்து ஒடிசாவின் முன்னாள் துணை சபாநாயகர் பண்டா, மத்திய அரசுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கக்கோரி கடிதங்களை எழுதினார்.

அதில், ஜராதா காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உதைத்ததாலேயே கீழே விழுந்த மாமி அதிகாரி (வயது 26) அருகிலுள்ள பேரம்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் அன்றே தனது குழந்தையை பெற்றெடுக்க நேர்ந்தது எனவும், தனக்கு உரிய நீதி வழங்கும்படியும் அவர் தனது கடிதத்தில் கோரியிருந்தார்.

இரு மாதங்களுக்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஒரு பழைய வழக்கு தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் வீட்டுக்கு அவரது கணவரைத் தேடிச் சென்றுள்ளார். அங்கு இப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இப்பெண்ணின் கணவர் நவம்பர் 15 அன்று ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும எனக் கோரி ஒடிசா தெற்கு பிராந்திய போலீஸ் டிஐஜி அமிதாப் தாகூர் அலுவலகம் எதிரே மாமி அதிகாரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, பேரம்பூர் துணை காவல் ஆய்வாளருக்கு (மனித உரிமை) டிஐஜி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

விசாரணை குறித்து தெரிவித்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், மாநில அரசுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் மட்டும் நாங்கள் விசாரணை அறிக்கையை அனுப்பியுள்ளோம். நேரடியாக மத்திய அரசுக்கு இந்த அறிக்கையை அனுப்புவது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்றது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணி தாக்குதல்இன்ஸ்பெக்டர்ஒடிசாமத்திய அரசுமனித உரிமை மீறல்

You May Like

More From This Category

More From this Author