Published : 31 Dec 2014 11:51 AM
Last Updated : 31 Dec 2014 11:51 AM

புத்தாண்டு தினத்தன்று யாரும் நேரில் வரவேண்டாம்: நிர்வாகிகளுக்கு திமுக வேண்டுகோள்

திமுக தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

திமுக அமைப்புத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் ஏற்கெனவே திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெற்றுச் சென்றுள்ளனர்.

கருணாநிதியின் உடல் நலம் கருதி, புத்தாண்டு தினத்தன்று அவரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ள மாவட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் சென்னைக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x