Last Updated : 12 Dec, 2014 02:15 PM

 

Published : 12 Dec 2014 02:15 PM
Last Updated : 12 Dec 2014 02:15 PM

காங்கிரஸ் இல்லாத நாடாக இந்தியா மாறும்: பாஜக தலைவர் அமித் ஷா

காங்கிரஸ் இல்லாத நாடாக இந்தியா விரைவில் மாறும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூறினார்.

டெல்லியில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட அமித் ஷா, "நாட்டில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. விரைவில் இந்தியா காங்கிரஸ் இல்லாத நாடாக மாறும். அதற்கான நாள் வெகு தூரத்தில் இல்லை.

நடந்து முடிந்த தேர்தல்களின் இதனை மக்கள் நிரூபித்துள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x