Published : 19 Oct 2014 12:41 PM
Last Updated : 19 Oct 2014 12:41 PM

ஐஎஸ்எல்: சென்னையில் டிக்கெட் விற்பனை

சென்னையில் நடைபெறவுள்ள முதல் 4 இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

ஆன்லைனில் டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் >http://in.bookmyshow.com/sport/indian-super-league/chennaiyin-fc/ என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட் பெறலாம். இதுதவிர நேரு மைதானத்திலும் டிக்கெட் விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 6 மணி வரை இங்கு டிக்கெட் வாங்கலாம். ரூ.100, ரூ.150, ரூ.200, ரூ.350, ரூ.5,000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.

சென்னையில் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணியும், கேரள பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணியும் மோதுகின்றன. 28-ம் தேதி நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகளும், நவ.4-ம் தேதி நடைபெறும் 3-வது ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகளும், நவ.8-ம் தேதி நடைபெறும் 4-வது ஆட்டத்தில் சென்னை-நார்த் ஈஸ்ட் அணிகளும் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x