Published : 20 Oct 2014 12:23 PM
Last Updated : 20 Oct 2014 12:23 PM

மணிப்பூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

மணிப்பூர் மாநிலம் ஹியங்லங்காம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 17-ம் தேதி மணிப்பூர் மாநிலம், ஹியங்லங்காம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 24,492 வாக்காளர்களை கொண்ட இத் தொகுதியில், 93% பேர் வாக்களித்தனர்.

இத்தொகுதி, முதல்வர் ஒக்ராம் இபோபியின் சொந்த மாவட்டத்தில் இருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் ஆதாயமாக அமைந்தது.

இந்நிலையில், இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளார் திஜ்வாமானி இலங்பம் 9008 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x