Published : 18 Sep 2014 10:58 am

Updated : 18 Sep 2014 10:58 am

 

Published : 18 Sep 2014 10:58 AM
Last Updated : 18 Sep 2014 10:58 AM

பங்குச் சந்தையில் 138 புள்ளிகள் உயர்வு: இரண்டு நாள் சரிவிலிருந்து மீண்டது

138

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தையில் புதன்கிழமை ஏற்றம் காணப்பட்டது. 138 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீ ட்டெண் 26631 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் 42 புள்ளிகள் அதிகரித்ததில் குறியீட்டெண் 7975 புள்ளிளானது.

இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகளின் விவாதம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் புதன்கிழமை நள்ளிரவில் தனது தனது கடன் கொள்கையை அமெரிக்க பெடரல் அறிவிக்கும். இருப்பினும் பங்குச் சந்தை ஏற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கடந்த இரண்டு தினங்களில் பங்குச் சந்தையில் மொத்தம் 568 புள்ளிகள் சரிந்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது நிதிக் கொள்கையை அறிவிக்கும் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததே சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இன்ஃபோசிஸ் பங்கு அதிகபட்சமாக 2.29 சதவீதம் உயர்ந்தது. டிசிஎஸ் 1.31 சதவீதமும், விப்ரோ 1.41 சதவீதமும் உயர்ந்தன. டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் பங்கு விலை அதிகபட்சமாக 2.52 சதவீதம் உயர்ந்தது. டாடா பவர், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பிஹெச்இஎல், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஸுகி, ஹீரோ மோட்டோகார்ப், ஐடிசி, லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் பெற்றன.

முக்கியமான 30 முன்னணி நிறுவனங்களில் சரிவைச் சந்தித்த 10 நிறுவனங்களில் கோல் இந்தியா, சிப்லா ஆகியவை அடங்கும். சர்வதேச அளவில் ஆசிய பிராந்திய பங்குச் சந்தைகளில் ஓரளவு ஏற்றம் காணப்பட்டது. சீன மக்கள் வங்கி 50,000 யுவானை ஐந்து வங்கிகளுக்கு அளிக்கப் போவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து ஷாங்காய் பங்குச் சந்தையில் அதிக ஏற்றம் காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 1,519 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,498 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 101 நிறுவனப் பங்கு விலையில் எவ்வித மாறுதலும் இல்லாத நிலை தொடர்ந்தது.

ரூபாய் மதிப்பு உயர்வு:

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து இரண்டாம் நாளாக உயர்ந்தது. 13 காசுகள் உயர்ந்ததில் ஒரு டாலரருக்கு ரூ. 60.92 தர வேண்டியிருந்தது. சர்வதேச அளவிலும் டாலரின் மதிப்பு சற்று பலவீனமாகவே இருந்தது.

பங்குச் சந்தைபங்குகள் ஏற்றம்பங்கு வர்த்தகம்சென்செக்ஸ்

You May Like

More From This Category

More From this Author