Published : 17 Sep 2014 11:00 AM
Last Updated : 17 Sep 2014 11:00 AM

கோவையில் தோட்டக்கலை கண்காட்சி

மத்திய அரசின் தோட்டக் கலைத்துறை சொஸைட்டி ஆப் இந்தியா வருடந்தோறும் சர்தேச தோட்டக்கலைத்துறை மாநாட்டை இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாநாட்டை இந்த ஆண்டு சென்னையில் நடத்த திட்டமிட்டது.

அதை விட தோட்டக்கலைத்துறை சார்ந்த பயிர் செய்பவர்களுக்கு பயனளிக்க உகந்த இடம் எனக்கருதி இந்த மாநாட்டை கோவை கொடீசியா அரங்கில் நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் தோட்டக் கலைத்துறை வல்லுநர்கள் உலக அளவில் இருந்து வந்து பேசவும், ஆய் வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கவும் உள்ளார்கள். தவிர இதில் தோட்டக்கலை பயிர்கள் விதைகள், உரங்கள், புதிய கண்டுபிடிப்புக் கருவி கள் போன்றவற்றை விற்கவும், வாங்கவும் விவசாயப் பெரு மக்கள் வர உள்ளார்கள்.

இந்த மாநாடு கொடீசியாவில் ஹால் ‘சி’யில் நடக்கிறது. அது சார்ந்த கண் காட்சி ஹால் ‘ஏ’, ஹால் பி ஆகியவற்றில் நடக்கிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறையும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும், கொடீசியாவும் இணைந்து நடத்துகின்றன. இக்கண்காட்சியில் காய்கறிகள் வளர்ப்பு, பழங்கள் வளர்ப்பு, பூக்கள் வளர்ப்பு குறித்த விஷயங்கள், விதைகள், தொழில்நுட்பங்கள், அது குறித்த கண்டுபிடிப்பு கருவிகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x