Published : 01 Sep 2014 12:01 PM
Last Updated : 01 Sep 2014 12:01 PM

திருவாரூர் அருகே 2 சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர் அருகே கோயில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டும்போது 2 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாரூர் அருகே உள்ள திருவாதிரைமங்கலத்தில் மிகப் பழமையான சிவலோகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணி நடைபெறுகிறது.

இதற்காக, சனிக்கிழமை இரவு பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தபோது சுமார் 5 அடி உயரமுள்ள நடராஜர் சிலையும், அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டன். நடராஜர் சிலையிலுள்ள திருவாச்சி உடைந் திருந்தது. திருவாரூர் வட்டாட் சியர் நாகராஜன் சிலை களை கையகப்படுத்தி திருவாரூர் எல்லையம்மன் கோயிலில் ஒப்படைத்தார். பின்னர், இந்தச் சிலைகள் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக் கப்படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x