Published : 16 Aug 2014 12:23 PM
Last Updated : 16 Aug 2014 12:23 PM

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம்: அரசு தீவிரம்

குறைந்தபட்ச ஊதிய விகிதம் தொடர்பான சட்டத்தைத் திருத்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதாகும். ஏறக்குறைய 66 ஆண்டுகள் பழமையான இந்த சட்டம் மாறிவரும் சூழ்நிலைக்கு பொருந்தாத வகையில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இதை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் வரைவு அறிக்கையை அனைத்து அமைச்சரகங்களுக்கும் அனுப்பி யுள்ளது. இது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு அரசின் ஆலோசனைக்கு அனுப்பப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என அவ்வப்போது பல்வேறு துறைகளிடமிருந்து அரசுக்கு ஆலோசனைகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளின் கருத்துகளைப் பெற்று அதனடிப்படையில் திருத்தம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. 1948-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் 1986-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இதில் வளர் இளம் பருவம் மற்றும் குழந்தைகள் என்ற வார்த்தைகள் மட்டும் நீக்கப்பட்டன.

குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை அதிகரிக்கவும் சட்ட அமைச்சகம் முடிவு செய் துள்ளது. அத்துடன் மீறுவோருக்கு சிறைத் தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என பரிந்துரைத் துள்ளது.

கடந்த ஜனவரி மாதமே இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x