Published : 08 Jul 2014 08:30 AM
Last Updated : 08 Jul 2014 08:30 AM

ரயில்களில் பழுதை கண்டுபிடிக்க நவீன சாதனங்கள்: பட்ஜெட்டில் பரிந்துரைக்கிறது ரயில்வே

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ரயில்களில் பழுதை கண்டுபிடிக்க ரயில் பாதையில் எக்ஸ்-ரே சாதனங்கள் நிறுவுவது தொடர்பான அறிவிப்பு வரும் ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே பாதுகாப்பு படைக்கு உயரிய பயிற்சிகள் அளிக்க நவீன பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இதுதொடர் பான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

2014-15-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச் சர் சதானந்த கவுடா செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக ரயில்வே வட்டாரங்கள் கூறும்போது, “ரயில் என்ஜின், பெட்டிகள், சரக்கு வேகன்கள் ஆகியவற்றின் எந்திர பாகங்களில் கோளாறுகளை கண்டுபிடிக்க, ரயில் பாதையில் பொருத்தமான இடங்களில் எக்ஸ்-ரே சாதனங்கள் நிறுவ திட்டமிட்டுள்ளோம். ரயில் சக்கரப் பகுதியில் சேதமடைந்த பாகங்களை இந்த சாதனங்கள் கண்டறியும். மேலும் ரயில் சக்கரங்கள், பேரிங், பிரேக் டிஸ்க் ஆகியவை அதிக வெப்பமடைந் துள்ளனவா என இந்த சாதனங்கள் கண்டறிந்து எச்சரிக்கும்.

தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ரயில் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறலாம்” என்றன.

சதானந்த கவுடா ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றது முதல், “ரயில் பயணிகளின் பாது காப்பை அதிகரிப்பதே தனது முன்னுரிமைப் பணி” என்று கூறிவருகிறார். இது தொடர்பாக ககோத்கர் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதில் அவர் ஆர்வம் காட்டிவருகிறார்.

ஆளில்லா ரயில்வே கிராஸிங் குகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது ககோத்கர் கமிட்டியின் முக்கியப் பரிந்துரை களில் ஒன்று. இது தொடர்பான அறிவிப்பும் கவுடாவின் முதல் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

நாடு முழுவதும் தற்போது 12,000 ஆளில்லா லெவல் கிராஸிங்குகள் உள்ளன. ரயில் விபத்துக ளில் சுமார் 40 சதவீதம் இங்கு நிகழ்கின்றன. ஆளில்லா லெவல் கிராஸிங்குகளை குறைக்க அதிக நிதி தேவைப்படுகிறது. இந்நிலை யில் இதற்காக நிதியம் ஒன்றை ஏற்படுத்த ரயில்வே பரிந்துரைக்கும் என்று தெரிகிறது.

அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு

அதிவேக ரயில் சேவை மற்றும் சரக்கு ரயில்களுக்கு தனிப் பாதை அமைப்பதில் 100 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவையின் அனுமதி கோருவது தொடர்பான வரைவு அறிக்கை ஒன்றை வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச் சகம் தயாரித்துள்ளது. இதனை பிற அமைச்சகங்களின் ஆலோச னைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் ரயில்வே துறை யில், நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தால், பாதுகாப்பான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x