Published : 15 Apr 2015 11:14 am

Updated : 15 Apr 2015 11:14 am

 

Published : 15 Apr 2015 11:14 AM
Last Updated : 15 Apr 2015 11:14 AM

ஐசிஐசிஐ வங்கியில் வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு

ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடனுக் கான வட்டி விகிதத்தைக் குறைத் துள்ளது. 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழைய வாடிக்கையா ளர்கள் மற்றும் புதிய வாடிக்கை யாளர்களுக்கு வட்டி விகிதம் 9.90 சதவீதமாக இருக்கும்.

இந்த திருத்தியமைக்கபட்ட புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 14 ம் தேதியிலிருந்து நடைமுறைப் படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்கள் மற்றும் பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினருக்கான வீட்டுக்கடன் வட்டி விகிதம் 9.85 சதவீதமாக இருக்கும் என்றும் இதர வீட்டுக்கடன் விண்ணப்பங்களுக்கு 9.90 சதவீதமாக வட்டி விகிதம் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்த வங்கி ஏற்கெனவே தனது அடிப்படை வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. இதனால் மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி முதல் வட்டி விகிதம் குறைந்தது.

ஐசிஐசிஐவங்கிவீட்டுக் கடன்வட்டிக் குறைப்பு

You May Like

More From This Category

More From this Author