Published : 25 Apr 2015 10:07 AM
Last Updated : 25 Apr 2015 10:07 AM

இன்போசிஸ் லாபம் 3.5% உயர்வு

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 3.5 சதவீதம் உயர்ந்து 3,097 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகரலாபம் 2,992 கோடி ரூபாயாக இருந்தது.

மார்ச் காலாண்டில் நிறுவனத் தின் வருமானம் 4.2 சதவீதம் உயர்ந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 12,875 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 13,411 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

ஆனால் கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது நிகரலாபம் 4.7 சதவீதம் சரிந்திருக் கிறது. கடந்த டிசம்பர் காலாண்டில் 3,250 கோடி ரூபாய் நிகர லாபமாக இருந்தது. டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது வருமானமும் 2.8 சதவீதம் சரிந்திருக்கிறது. டிசம்பர் காலாண்டு வருமானம் 13,796 கோடி ரூபாயாக இருந்தது.

2015-16-ம் நிதி ஆண்டில் வருமானம் 10-12 சதவீதம் வரை உயரக்கூடும் என்று இன்போசிஸ் தெரிவித்திருக்கிறது. ஐடி துறை அமைப்பான நாஸ்காம் 2015-16ம் நிதி ஆண்டில் ஐடி துறை 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என கருத்து தெரிவித்திருக்கிறது.

2020-ம் ஆண்டு 2,000 கோடி டாலர் வருமானம் எதிர்பார்ப்பதாக வும், அந்த சமயத்தில் ஒரு பணி யாளர் மூலம் 80,000 டாலர் வருமானம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் இன்போ சிஸ் நிறுவனத்தின் தலைவர் விஷால் சிக்கா தெரிவித்தார்.

இன்போசிஸ் மட்டுமல்லாமல் டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வெளி யாக வில்லை. சேவை துறையின் வளர்ச்சி நான்காம் காலாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி பிரவீண் ராவ் தெரிவித்தார்.

Kallidus நிறுவனத்தை 763 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த போவதாக இன்போசிஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. அதேபோல Airviz நிறுவனத்தில் 13 கோடி ரூபாய் முதலீடு செய்து கணிசமான பங்குகளை வாங்கியது.

மார்ச் மாத இறுதியில் 1,76,187 பணியாளர்கள் இருக்கிறார்கள். கடந்த மார்ச்சில் 1,60,405 பணியாளர்கள் இருந்தார்கள்.

வேலை மாறுவோர் விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக் கிறது. வேலை மாறுவோர் விகிதம் 13.4 சதவீதமாக குறைந்திருக்கிறது. சமீப காலமாக பணியாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தியதால் வேலையில் இருந்து வெளியேறுவோர் விகிதம் குறைந்திருக்கிறது என்று விஷால் சிக்கா தெரிவித்தார்.

நேற்று 1:1 என்ற அளவில் போனஸ் பங்குகளை கொடுப்ப தாக இன்போசிஸ் நிறுவனம் அறிவித்தது. காலாண்டு முடிவுகள் சிறப்பாக இல்லாததால் 6 சதவீதம் அளவுக்கு இன்போசிஸ் பங்கு சரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x