Published : 11 Apr 2015 11:38 AM
Last Updated : 11 Apr 2015 11:38 AM

யாரையோ காப்பாற்ற 20 தமிழர்கள் மீது ஆந்திர போலீஸ் துப்பாக்கிச் சூடு: பொன்.ராதாகிருஷ்ணன்

ஆந்திராவில் தமிழகத் தொழி லாளர்கள் 20 பேரை அம்மாநில காவல் துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக அம்மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்றார் மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

திருச்சியில் நேற்று அவர் நிருபர் களிடம் மேலும் கூறியதாவது:

ஆந்திராவில் அம்மாநில போலீ ஸார் தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்றது தவறான முன்னுதாரணம். ஆந்திர போலீஸாரின் செயல் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள் ளது. செம்மரக் கடத்தலில் தொடர்பு டைய முக்கிய குற்றவாளிகள் யார், யார்? இதன் மூளையாக செயல்படுவோர் யார் என்பதை அறியாமல் அப்பாவித் தொழி லாளர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது. இவ் விஷயத்தில் தவறு செய்துள்ள அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இப்பிரச்சினையை இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாக திசை திருப்ப முயல்வது வருத்தத்துக்குரியது. செம்மரம் வெட்டிக் கடத்துவது சர்வதேச அளவில் நடைபெறு வதாக கருதுகிறோம். எனவே, ஆந்திர அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு மற்றும் ராசிமணல் பகுதிகளில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்காது.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க தமிழக ஆறுகளின் குறுக்கே தடுப்பணைக் கட்டவேண்டும் என்றார்.

சீமான் வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர் களிடம் கூறியதாவது: திருப்பதி மலையில் செம்மரம் கடத்தியதாக கூறி 20 தமிழர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடலில் தீக் காயங்கள் உள்ளன. 20 தமிழர் களையும் ஆந்திர போலீஸார் சித்திரவதை செய்து சுட்டு கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பற்றி ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய அரசும் ஆந்திர அரசுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல், எந்த கேள்வியும் எழுப்பாமல் மவுனமாக இருந்து வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x