Published : 11 Feb 2015 11:46 AM
Last Updated : 11 Feb 2015 11:46 AM

ஆவின் கால் லிட்டர் பாக்கெட்: மேலும் 5 இடங்களில் விற்பனை

ஆவின் நிர்வாகம் சார்பில், வட சென்னை பகுதியில் கூடுதலாக 5 இடங்களில் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக ஆவின் நிர்வாகம் கடந்த 4-ம் தேதி கால் லிட்டர் அளவு கொண்ட பச்சை நிற பாக்கெட் பாலை முதற்கட்டமாக வடசென்னை பகுதியில் அறிமுகம் செய்தது. தற்போது ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.11-க்கு விற்பனை செய்யப்படும் இந்த ஆவின் கால் லிட்டர் பாலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் சுமார் 3 ஆயிரம் பாக்கெட் விற்பனையாவதால், வடசென்னை பகுதியில் கூடுதலாக 5 இடங்களில் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனையைத் தொடங்க ஆவின் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘வடசென்னை பகுதியில் ஆவின் கால் லிட்டர் பாக்கெட் பால் பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, ஓரிரு நாட்களில் வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர், விருகம்பாக்கம், அசோக் நகர் ஆகிய 5 இடங்களில் விற்பனையைத் தொடங்கவுள்ளோம். வரவேற்பைப் பொருத்து மற்ற பகுதிகளிலும் விற்பனை தொடங்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x