Published : 04 Feb 2015 10:56 AM
Last Updated : 04 Feb 2015 10:56 AM

இவரைத் தெரியுமா?- வி.எஸ்.எஸ் மணி

$ ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ கொல்கத்தாவில் உள்ள நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தொலைதூர கல்வியில் பி.காம் படித்தவர்.

$ படித்த பிறகு யுனெடெட் டேட்டா பேஸ் (யெல்லோ பேஜஸ்) என்னும் நிறுவனத்தில் விளம்பர பிரிவில் பணியாற்றியவர். அங்கு தோன்றியதுதான் ஜஸ்ட் டயல் நிறுவனத்துக்கான ஐடியா. (அதாவது வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை போன் மூலம் தருவது)

$ 1989-ம் ஆண்டு ஆஸ்க் மீ (Askme ) என்னும் நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். ஆனால் தொலைபேசி அப்போது பிரபலமடையாத காரணத்தால் 1991-ம் ஆண்டு அந்த நிறுவனத்தை மூட வேண்டியதாயிற்று.

$ இடையில் சின்ன சின்ன வேலைகள் செய்தவர் 1996-ம் ஆண்டு ரூ. 50,000 முதலீட்டில் 5 நபர்களை வைத்து ஆரம்பித்ததுதான் ஜஸ்ட் டயல் நிறுவனம்.

$ 2007-ம் ஆண்டு டைகர் குளோபல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தன. 2013-ம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இவரது நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 11,009 கோடி ரூபாய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x