Published : 06 Feb 2015 10:37 AM
Last Updated : 06 Feb 2015 10:37 AM

சட்டக் கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் நேற்று வழக்கு தொடரப் பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சட்டக் கல்லூரி மாணவர் ஐ.சித்திக் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை சென்னை பாரிமுனை யில் இருந்து 50, 60 கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. இது குறித்து உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக சட்டத் துறை செயலாளர், சட்டக் கல்வி இயக்குநர், அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் ஆகியோரை மாணவர்கள் குழு தொடர்பு கொண்டபோது, எதையும் தெரி விக்காமல் அமைதியாக இருந்தனர். இதையடுத்து சில மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டக் கல்லூரி அமைந்துள்ள கட்டிடம், 120 ஆண்டுகள் பழமை யானது. இன்னும் 500 ஆண்டுகள் வரை இக்கட்டிடம் உறுதித் தன்மையோடு இருக்கும். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கல்லூரியால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி, கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிடுகின்றனர்.

சட்டக் கல்லூரி உயர் நீதிமன்ற வளாகத்திலேயே செயல்பட்டால் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியும், அனுபவமும் கிடைக்கும். எனவே, சட்டக் கல் லூரியை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என்று சட்ட மாணவர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில், அமைதியான முறையில் கல்லூரி முன்பு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படு காயமடைந்தனர். இது மனித உரிமை மீறிய செயலாகும்.

எனவே, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை வேறு இடத் துக்கு மாற்றக்கூடாது என்று சட்டத் துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். கல்லூரியை இட மாற்றம் செய்வது குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு, அது குறித்து விவாதிக்க மாணவர் பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கவும், சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித்தன மாக தாக்குதல் நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் அக்னிஹோத்ரி, வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு சில வழக்கறிஞர்கள் நேற்று ஆஜ ராகி, ‘சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கோரினர். அதற்கு பதில ளித்த நீதிபதிகள், ‘‘முதலில் மாண வர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என்று மாணவர்கள் நேற்று தான் (பிப்.4) அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத் தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட் டால்தான் நீங்கள் நீதிமன்றத்தை நாட முடியும். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தப் போராட்டத்தையும் நீதி மன்றம் ஊக்குவிக்காது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், இவ்வழக்கை அவசர வழக் காக விசாரிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x