Published : 03 Feb 2015 03:01 PM
Last Updated : 03 Feb 2015 03:01 PM

வெற்றி நூலகம்: 03-03-2015

மூளையின் ஆற்றல் விளக்கம்

எல்லோருக்கும் நினைவாற்றல் உண்டு. நினைவாற்றலை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்றுதான் மனிதர்களைப் பிரிக்கமுடியும். எழுத்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக, மனிதரின் மூளைதான் அறிவைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்தது. மூளையின் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள் என்கிறது இந்த நூல்.

மூளையின் அற்புத ஆற்றலை அறிந்துகொள்வோம்!

ஆசிரியர் ந.ஸ்ரீதர், வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

தி.நகர்,சென்னை- 600 017, தொடர்புக்கு: 044-24342926

கல்விக்கான வழிகாட்டி

கல்விக் கடன் குறித்தும் கல்வி உதவித்தொகைகள் குறித்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் மிக விரிவான பல்வேறு தகவல்களைத் தருகிறது இந்த நூல். நீதிமன்றத் தீர்ப்புகள், அரசு உத்திரவுகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மாணவர் சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கு உதவும்.

கல்விக்கடன் உங்கள் உரிமை

ஆசிரியர்: எஸ்.பி.நெடுமாறன், திருவள்ளுவர் பதிப்பகம்

எண்,21/9, பிரகாசம்காரு தெரு,விஜயலட்சுமிபுரம், அம்பத்தூர்,சென்னை-600 053.

தொடர்புக்கு: 9445364918

பொது அறிவுக் களஞ்சியம்

ஒன்று, இரண்டு வரிகளில் பல ஆயிரக்கணக்கான பொது அறிவுத் தகவல்களை கொண்டுள்ளது இந்த நூல்.

மருத்துவம், அரசியல், சமூகவியல் எனப் பல்வேறு அறிவுத்துறையின் தகவல்கள் எளிமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சின்ன சின்னப் பொது அறிவு (சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும்)

தொகுப்பு: சி.இலிங்க தமிழ்மொழி, வெளியீடு: சுபா பதிப்பகம்,

174,மாடம்பாக்கம் ரோடு, ராஜகீழ்ப்பாக்கம், சென்னை-600 073

தொடர்புக்கு: 9952079787.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x